/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏரியில் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ஏரியில் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஏரியில் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஏரியில் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : மார் 12, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை, : திருபுவனை தொகுதிக்குட்பட்ட வம்புபட்டு ஏரியில் தூர்வாரும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., துவக்கிவைத்தார்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன், திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வம்புபட்டு கிராம ஏரியில் ரூ.12.51 லட்சம் மதிப்பில் துார்வாரும் பணி மேற்கொள்ளபட உள்ளது.
விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமையேற்று பூமி பூஜை செய்து, துார்வாரும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஜெயராமன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.