/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.எப்.டி., மைதானத்தில் இருந்து பஸ்களை இயக்குவது குறித்து ஆலோசனை
/
ஏ.எப்.டி., மைதானத்தில் இருந்து பஸ்களை இயக்குவது குறித்து ஆலோசனை
ஏ.எப்.டி., மைதானத்தில் இருந்து பஸ்களை இயக்குவது குறித்து ஆலோசனை
ஏ.எப்.டி., மைதானத்தில் இருந்து பஸ்களை இயக்குவது குறித்து ஆலோசனை
ADDED : மார் 14, 2024 06:21 AM

புதுச்சேரி, : புதுச்சேரிபுதிய பஸ்நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடப்பதால், ஏ.எப்.டி., திடல் மற்றும் திருவள்ளுவர் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது.
புதுச்சேரி புதிய பஸ் நிலையம், மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றாக, வேறு மூன்று இடங்களில் இருந்து பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு, தள்ளிப்போனது.
இந்நிலையில், ஏ.எப்.டி திடலில் இருந்து கடலுார் மற்றும் சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்களும், திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் இருந்து, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
இதனால், ஏ.எப்.டி.,மற்றும் திருவள்ளுவர் பஸ் நிலையங்களில் நடந்து வரும் பணிகளை எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அனிபால் கென்னடி ஆகிய இருவரும்நேற்று ஆய்வு செய்தனர். நகராட்சி, போக்குவரத்து, ஸ்மார்ட் சிட்டி நிறுவன அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இது குறித்து நேரு எம்.எல்.ஏ., கூறியதாவது:
வரும், 18ம் தேதியில் ( திங்கள் கிழமை) இருந்து, ஏ.எப்.டி., திடல் மற்றும் திருவள்ளுவர் பஸ் நிலையம் ஆகிய இரு இடங்களில் இருந்து பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த, பஸ் உரிமையாளர்கள், போக்குவரத்து மற்றும் நகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள், மூன்று மாதங்களில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

