/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு விசாரணை முடிந்து 2 பேர் சிறையில் அடைப்பு
/
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு விசாரணை முடிந்து 2 பேர் சிறையில் அடைப்பு
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு விசாரணை முடிந்து 2 பேர் சிறையில் அடைப்பு
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு விசாரணை முடிந்து 2 பேர் சிறையில் அடைப்பு
ADDED : மார் 20, 2024 05:06 AM

புதுச்சேரி : புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் மூன்று நாள் போலீஸ் காவல் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இருவரிடம் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி மாயமானார். போலீசார் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், வாய்க்காலில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ், 19; விவேகானந்தன், 57; ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த தடயங்கள், பெற்றோர் ரத்த மாதிரிகள், கைது செய்யப்பட்ட இருவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறையில் இருந்த கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இருவரையும் 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நேற்று முன்தினம் அனுமதி வழங்கப்பட்டது.
சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர். மூன்று நாட்களில் ஒரு நாள் விசாரணை காலம் உள்ள நிலையில், முன்னதாக விசாரணையை முடித்த போலீசார் நேற்று இரவு கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் ஒப்படைத்தனர்.

