/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீண்டும் மிரட்டும் நூறடிச்சாலை மேம்பாலம்: 12வது முறையாக 'பல்' இளித்தது

ADDED : மார் 04, 2024 05:46 AM

புதுச்சேரி : புதுச்சேரி நுாறடிச்சாலை மேம்பாலத்தில்கான்கிரீட் தளம் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
புதுச்சேரி நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலம், 35.72 கோடி மதிப்பில், கடந்த 2013ம் ஆண்டு கட்டுமான பணி துவங்கியது.
மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி, மல்லிகார்ஜூன கார்கே பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.
நீண்ட இழுப்பறிக்கு பிறகு பணிகள் முடிந்து 2018 ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த மேம்பாலம் கட்டி முடித்த நாளில் இருந்து கான்கிரீட் சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு, இரும்பு கம்பிகள் தெரிவதும், பொதுப்பணித்துறை அவற்றை தற்காலிகமாக சரிசெய்வது தொடர் கதையாக உள்ளது.
அந்த வரிசையில் 12வது முறையாக நுாறடிச் சாலை கான்கிரீட் தள பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்திரா சிக்னலில் இருந்து ஆர்.டி.ஓ. செல்லும் பாதையில் 3 இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.இப்படி ஒவ்வொரு மாதமும் பாலத்தில் பள்ளம் ஏற்படுவதும், சரிசெய்தவுடன் அடுத்த இடத்தில் பள்ளம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு நிரந்த தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.