ADDED : மே 04, 2025 04:50 AM
புதுச்சேரி : கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அக்னி வெயில் இன்று துவங்கி வரும் 28ம் தேதி முடிவடைகிறது.
புதுச்சேரியில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வேலுார், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. புதுச்சேரியில், 98 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று 4ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி நிறைவடைகிறது.
கத்திரி வெயில் காலத்தில் வெப்ப அலை வீசும் என்பதால், 12:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில், போதிய படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன், பஸ் நிலையம், சுற்றுலா தளங்கள் ஆகிய இடங்களில் குடிநீர் வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வேண்டும் என, கலெக்டர் குலோத்துங்கன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

