தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மானிய விலையில் விதைகள் வேளாண் துறை அறிவிப்பு

மானிய விலையில் விதைகள் வேளாண் துறை அறிவிப்பு

மானிய விலையில் விதைகள் வேளாண் துறை அறிவிப்பு


UPDATED : அக் 06, 2026 11:31 PM

ADDED : அக் 06, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:31 PM ADDED : அக் 06, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எண்ணெய் வித்து மற்றும் பயறு வகை பயிர்களுக்கு மானியத்தில் விதைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வேளாண் துறை இயக்குனர் ஜெயசங்கர் செய்திக்குறிப்பு:

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய அளவில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி பரப்பளவை, அதிகரித்து எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெறவும், பயறு வகை உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடையவும், எண்ணெய் வித்து பயிர்களுக்கான தேசிய இயக்கம் மற்றும் பயறு வகை உற்பத்தியில் தற்சார்பு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்காலில், தேசிய ஆராய்ச்சி நிலையங்களால் வெளியிடப்பட்டள்ள உயர் விளைச்சல் மணிலா மற்றும் பயறு வகை விதைகளை வழங்கி அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை பட்டத்தில் வி.ஆர்.ஐ., கிர்நனர் உள்ளிட்ட உயர் விளைச்சல் ரங்கங்கள் நுாறு சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. வம்பன் 10 உயர் விளைச்சல் உளுந்து, எக்டர் ஒன்றுக்கு 20 கிலோ நுாறு சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் பச்சை பயறு விதைகளும் நுாறு சதவீத மானியத்தில் சிறு தொகுப்புகளாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் மணிலா மற்றும் பயறு விதைகள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். பயிர்கள் சற்று வளர்ந்த நிலையில், புகைப்படம் எடுத்து கிரிஷி மேப்பர் எனப்படும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இத்திட்டத்தில், பயனடைய விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள உழவர் உதவியகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மறு பதிவு செய்ய வேண்டாம். இத்திட்டத்தின் கீழ், தனியார் மற்றும் நிறுவனங்கள் சிறிய எண்ணெய் ஆலைகள் அமைக்க 33 சதவீத மானியம் அல்லது ரூ.9.50 லட்சத்திற்கு மிகாமலும், சிறிய பயறு அரவை நிலையம் அமைக்க 33 சதவீதம் அல்லது ரூ.25 லட்சம் மிகாமலும் மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தட்டாஞ்சாவடி பயிற்சி வழி தொடர்பு திடட் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us