UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 06:18 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாநில மையக்குழு கூட்டம், தலைமை அலுவலகத்தில் நடந்தது.
பா.ஜ., மாநில பொறுப்பாளரும், தேசிய செயலாளர் சுரேந்திரன் தலைமை தாங்கினார்.
பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜசேகரன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்., ஜான்குமார், மீனாட்சி சுந்தரம், முன்னாள் சபாநாயகர் செல்வம், மாநில பொது செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமிநாராயணன், மாநில துணைத் தலைவர்கள் ஜெயக்குமார், ஜெயலட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சியின் அமைப்பு பணிகள், வரவிருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
