தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வனவிலங்கு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

வனவிலங்கு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

வனவிலங்கு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 06, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 06:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வனத்துறை சார்பில், கடந்த 2ம் தேதி முதல் நாளை 8ம் தேதி வரை வனவிலங்கு வாரம் கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி விமான நிலையத்தில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் தலைமையில், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் குமரன் பேசியதாவது:

இந்தியாவில் 350ம் மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளன. இதில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவை விஷம் இல்லாதவை. தென்னிந்தியாவில் விஷமுள்ளதாக நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் என, ஆகிய நான்கு பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நாம் அவற்றை தொந்தரவு செய்யாமல் இருந்தால், அது நம்மை தீண்டாது. இதில், கட்டு விரியன் பாம்பு அதிகாலை நேரங்களில், உலா வரும். பாம்புகள் கோடை காலத்தில், குளிர்ச்சியான பகுதிகளை தேடி வரும். மழைக்காலத்தில், உணவுக்காக தண்ணீர் நிறைந்த இடங்களை தேடி வரும். குளிர் காலத்தில் வெப்பமான பகுதிகளில் காணப்படும். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்’ என்றார்.

பாம்பு பிடிப்பது குறித்து வனத்துறை ஊழியர் வாழுமுனி செயல்முறை விளக்கம் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us