UPDATED : அக் 07, 2026 03:21 AM
ADDED : அக் 06, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், சொர்ணா நகர் பகுதியில் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று அந்த பகுதிக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு சந்தேகமான முறையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கடலுார் மாவட்டம், கிழழிஞ்சிப்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 24, என்பதும், அவர் கஞ்சா வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்து, அவரிடமிருந்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 75 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
