/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் மழை பாதிப்பு வேளாண் அதிகாரிகள் ஆய்வு
/
பாகூரில் மழை பாதிப்பு வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 23, 2025 11:38 PM

பாகூர்: பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பாகூர் பகுதியில் வடகிழக்கு பருவ மழை துவங்கி கடந்த சில நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. பாகூர், குருவிநத்தம், சேலியமேடு உள்ளிட்ட கிராமங்களில், சம்பா பருவ நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.
புதுச்சேரி வேளாண் துறை துணை இயக்குனர் குமாரவேலு தலைமையில் வேளாண் அலுவலர் பரமநாதன் மற்றும் அதிகாரிகள் குழுவினர், நேற்று பாகூர், குருவிநத்தம், இருளஞ்சந்தை, சேலியமேடு உள்ளிட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்டு, சேத நிலவரங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகளிடம் மழைக் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கினர். உதவி வேளாண் அலுவலர் முத்துக்குமரன், களப்பணியாளர் குனசீலன், பிரபாசங்கர், ஆத்மா மேலாளர் ஆறுமுகம் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

