/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிதம்பரம் பல்கலையில் வேளாண் கருத்தரங்கம்
/
சிதம்பரம் பல்கலையில் வேளாண் கருத்தரங்கம்
ADDED : பிப் 04, 2024 03:19 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில், விவசாயிகளுக்கான அங்கக மற்றும் இயற்கை வேளாண் கருத்தரங்கை, துணைவேந்தர் கதிரேசன் துவக்கி வைத்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலம், இயற்கை மற்றும் வளம் குன்றா வேளாண் மையம், பெங்களூரு மண்டல அங்கக மற்றும் இயற்கை வேளாண் மையம் சார்பில், விவசாயிகளுக்கான ஒரு நாள் வேளாண் கருத்தரங்கு நடந்தது. பல்கலைக்கழக பொறியியல் புல கலையரங்கில் நடந்த கருத்தரங்கில், வேளாண் மைய இயக்குனர் ராமன் வரவேற்றார். வேளாண் புல முதல்வர் அங்கையாகன்னி தலைமை தாங்கினார். துணைவேந்தர் கதிரேசன் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
சென்னை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல இயக்குனர் ஷோபனாகுமார் சிறப்புரையாற்றினார். பெங்களூரு வேளாண் மைய மண்டல இயக்குனர் ரவீந்திரகுமார் திட்ட அறிமுக உரையாற்றினார். கடலூர் வேளாண் இணை இயக்குனர் கண்ணையா வாழ்த்துரை வழங்கினார்.
இணை விஞ்ஞானி சீனிவாசன் நன்றி கூறினார்.
தமிழ்நாடு அரசின் நம்மாழ்வார் விருது பெற்ற பேராசிரியர் முரளி கிருஷ்ணன், உதவி பேராசிரியர் கோதண்டராமன், இணை பேராசிரியர் செல்வ முத்துக்குமரன் உள்ளிட்டோர் கருத்தரங்கில் உரையாற்றினர். துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் பாக்கியராஜ், பி.ஆர்.ஓ., ரத்தினசம்பத் மற்றும் பேராசிரியர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.