/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 01, 2026 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: பெண்ணை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த விருப்பாட்சி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் மனைவி அனுசுயா, 24; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த, உறவினர் வீரப்பன் குடும்பத்தினருக்கும் இடையே இடம் தொடர்பான முன் விரோதம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அனுசுயாவை, வீரப்பன் மகன்கள் ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி, ராமு, லட்சுமணன் ஆகிய, 3 பேர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

