/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தலை முன்னிட்டு 437 போலீசார் அதிரடி இடமாற்றம்
/
லோக்சபா தேர்தலை முன்னிட்டு 437 போலீசார் அதிரடி இடமாற்றம்
லோக்சபா தேர்தலை முன்னிட்டு 437 போலீசார் அதிரடி இடமாற்றம்
லோக்சபா தேர்தலை முன்னிட்டு 437 போலீசார் அதிரடி இடமாற்றம்
ADDED : பிப் 01, 2024 05:16 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி போலீசில் 117 ஏட்டுகள், 320 கான்ஸ்டபிள்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் புதுச்சேரியில் 3 ஆண்டிற்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் 6 இன்ஸ்பெக்டர் மற்றும் 59 சப்இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து நேற்று பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 117 தலைமை காவலர்களும், 320 கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான ஆணையை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம்கோஷ் வெளியிட்டுள்ளார்.