/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
27ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் அ.தி.மு.க., அன்பழகன் தகவல்
/
27ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் அ.தி.மு.க., அன்பழகன் தகவல்
27ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் அ.தி.மு.க., அன்பழகன் தகவல்
27ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் அ.தி.மு.க., அன்பழகன் தகவல்
ADDED : ஜூலை 25, 2025 02:30 AM
புதுச்சேரி: அ.தி.மு.க., சார்பில், வரும் 27ம் தேதி புதுச் சே ரியில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
புதுச்சேரி மாநில அ.தி.மு.க., மற்றும் அம்மா அறக்கட்டளை சார்பில், வரும் 27ம் தேதி அம்பேத்கர் சாலையில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காலை 9:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
முகாமில் டெக்ஸ்டைல், ஐ.டி., மருத்துவம், வங்கி, நிதி நிறுவனங்கள், சாப்ட்வோர் என, 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெற்று தகுதியான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில், பத்தாம் வகுப்பு முதல் கல்லுாரி படிப்பு படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், சுய விவர குறிப்பு மற்றும் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என்றார்.
பேட்டியின் போது மாநில இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் கருணாநிதி, வேலவன், முனியன் உடனிருந்தனர்.