தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம் அ.தி.மு.க., அன்பழகன் அறிவிப்பு

 ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம் அ.தி.மு.க., அன்பழகன் அறிவிப்பு

 ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம் அ.தி.மு.க., அன்பழகன் அறிவிப்பு


ADDED : ஜன 25, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

அவர், கூறியதாவது:

புதுச்சேரி அரசு நிர்வா கத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், பால சேவிகாக்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பகுதிநேர விரிவுரையாளர்கள், தினக்கூலி ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணிபுரியும், ஊழியர்களுக்கு துரோகத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாக நடைபெற்று வருகிறது.

அரசுத் துறைகளில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்ற உத்தரவிட்டும், அரசு உயர் அதிகாரிகளும், முதல்வரும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருவதால், புதுச்சேரி நகர பகுதி முழுதும் போராட்டக்களமாக மாறி உள்ளது. இதில் அரசு பாரா முகமாக இருக்கக் கூடாது. உடனடியாக முதல்வர், அ மைச்சரவையை கூட்டி இறுதி கொள்கை முடிவு எடுத்து, அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தொடர்ந்து புறக்கணித்தால் மிகப் பெரிய போ ராட்டம் நடத்தப்படும்.

வரும் சட்டசபை தேர்தலில் நாராயணசாமி போட்டியிடுவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us