/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு சலுகை அறிவிப்பு
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு சலுகை அறிவிப்பு
ADDED : ஜன 25, 2026 04:28 AM
புதுச்சேரி: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., துணை பொது மேலாளர் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு, சிம் கார்டு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு ரூபாய் மதிப்புள்ள சிம் கார்டு இலவசமாக பெற்று கொள்ளலாம். இந்த சிம்கார்ட்டில் 30 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் இலவசம்.
இந்த சலுகையை பொது மக்கள் பி.எஸ்.என்.எல். அங்கீகாரம் பெற்று விற்பனையாளர்கள், அனைத்து ரீட்டைலர்கள் கடைகள், வில்லியனுார், மேட்டுப்பாளையம், மற்றும் மெயின் தொலைபேசி நிலைய வடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் மேளா நடைபெறும் இடங்களில் பெற்று கொள்ளலாம்.
மேலும், அதிவேக இன்ட ர்நெட் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 999 ரூபாய் மாத கட்டணம் கொண்டு இந்த திட்டத்தின், 12 மாத முன்பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியுடன், மாதம் 799 ரூபாய் மட்டுமே. இணைய வேகம் அதிகபட்சம் 200 எம்.பி. பீ.எஸ்., மாதத்திற்கு 5,000 ஜி.பி., இலவச ஓ.டி.டீ சேவைகள்.
அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி.,, அழைப்புகள் இலவசம். இந்த சலுகை வரும் மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே. இந்த இணைப்பினை பெற, https://bookmyfiber.bsnl.co.in/ என்ற இணைய தளத்தை பார்வையிடவும்.

