/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசார், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அ.தி.மு.க., அன்பழகன் அறிவுறுத்தல்
/
போலீசார், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அ.தி.மு.க., அன்பழகன் அறிவுறுத்தல்
போலீசார், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அ.தி.மு.க., அன்பழகன் அறிவுறுத்தல்
போலீசார், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அ.தி.மு.க., அன்பழகன் அறிவுறுத்தல்
ADDED : மே 11, 2025 11:34 PM
புதுச்சேரி: போலி மதுபான தொழிற்சாலையை கண்காணிக்க தவறிய அனைத்து போலீசார், அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.
அவர், கூறியதாவது;
புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட போலி மதுபானங்கள் கடலுார், நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தமிழக மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்ட போலி மதுபானங்கள், வானுார் அருகே பூத்துறையில் தமிழக கலால் துறையினரால்பறிமுதல் செய்யப்பட்டது.
பின், வில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் பகுதியில் அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் அளவிற்கு போலி மதுபான உற்பத்தி செய்யப்பட்டு கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
அமைச்சரின் குடும்பத்திற்கு சொந்தமான இடம் என்பதால் போலி மதுபான தொழிற்சாலையை உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிக்காமல் விட்டுள்ளனர்.இப்பிரச்னையில் தொடர்புடைய உள்ளூர் அனைத்து போலீசார் மற்றும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.