/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி நடன நிகழ்ச்சி நடத்தும் ரெஸ்டோ பார்கள் மீது நடவடிக்கை அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்

ADDED : ஆக 18, 2025 03:59 AM
புதுச்சேரி: அனுமதியின்றி நடன நிகழ்ச்சிகளை நடத்தும் ரெஸ்டோ பார்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது, அறிக்கை:
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்கள் நடத்துவதற்கு போலீசார் எவ்வித அனுமதியும் வழங்குவதில்லை. மாறாக, ரெஸ்டாரண்டுகளில் உணவு சாப்பிட வருபவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய மட்டும் இரவு 12 மணி வரை 'டூரிஸ்ட் எப்.எல்.2 லைசென்ஸ்' வழங்கப்படுகிறது.
ஆட்சியாளர்களுக்கு வேண்டிய ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் அரசின் எந்த துறையின் அனுமதியும் வழங்காமல், கிளாசிக்கல் மியூசிக், அரைகுறை நடனம்,ஆண், பெண் இருவரும் சேர்ந்து நடனமாடுவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு கட்டணமாக ஆண், பெண் இருவரும் ஜோடியாக வந்தால் ரூ. 3000, ஆண் மட்டும் வந்தால் ரூ.2000, அரைகுறை ஆடையுடன் வரும் பெண்ணுக்கு கட்டணம் இலவசம். இந்த ரெஸ்டோ பார்களில் உள்ளாட்சி நிர்வாகம் முறையாக கேளிக்கை வரி விதித்து வசூல் செய்திருந்தால், நகரப் பகுதியில் உள்ள ரெஸ்டோ பார்களில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் ரூ.70 கோடி புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு வரியாக வந்திருக்கும்.ஆனால் ஒரு ரூபாய் கூட வரி வசூல் செய்யாதது திட்டமிட்ட ஊழல் ஆகும்.
எனவே, அனுமதியின்றி நடன நிகழ்ச்சிகளை நடத்தும் ரெஸ்டோ பார்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
மாநில பொருளாளர்ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் நாகமணி ஆகியோர் உடனிருந்தனர்.