/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
/
ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
ADDED : செப் 21, 2025 11:18 PM
புதுச்சேரி: ஊழல் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
இந்தாண்டிற்கான மத்திய தணிக்கை அறிக்கையில் புதுச்சேரி அரசு துறைகளின் ஊழல், கையாடல், முறைகேடு சம்பந்தமாக தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மொத்தம் 316 குற்றசாட்டுகளில், மின்துறையில் மட்டும் 257 குற்றச்சாட்டுகளில் ரூ.27 கோடிக்கு மேல் துறை அதிகாரிகளால் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு பொதுக் கணக்கு குழு, மதிப்பீட்டுக் குழு ஆகிய இரண்டும் இணைந்து குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய சம்மன் அனுப்பி தீவிரமாக விசாரித்த வேண்டும்.
அதில், அதிகாரிகள் குற்றம் செய்தது உண்மை என, உணரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க சட்டசபைக்குகமிட்டியின் தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும்.
அதைவிடுத்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரச்னையை திசை திருப்பும் பணியை வழக்கம் போல் தி.மு.க.,வும், இன்னும் சிலரும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட குழுக்கள் சுதந்திரமாக தங்கள் கடமையை செய்ய வேண்டும். அப்போது தான் அரசு நிர்வாகம் செம்மைப்படும்.
சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ள குழுக்கள் தங்கள் கடமையை செய்வதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.