/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருப்பணிக்கு எம்.எல்.ஏ., நிதியுதவி
/
கோவில் திருப்பணிக்கு எம்.எல்.ஏ., நிதியுதவி
ADDED : செப் 21, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட நல்லுார் கிராமத்தில் உள்ள கருமுத்துமாரியம்மன்கோவில் திருப்பணி நடந்து வருகிறது. புதுச்சேரி ஜே.சி.எம்., மக்கள் மன்றத்தின் சார்பில் கோவில் திருப்பணிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று கிராம நாட்டாண்மைகளிடம் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதி ஜே.சி.எம்., மக்கள் மன்றத் தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர்கள் கேசவன், வடிவேல், பொருளாளர் கண்ணன், உடனிந்தனர்.