/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய ஆய்வுக்குழுவிடம் வெள்ள பாதிப்பு ஆதாரங்களை வழங்காதது கண்டிக்கத்தக்கது அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

ADDED : டிச 14, 2024 03:33 AM
புதுச்சேரி: மத்திய நிவாரண ஆய்வுக்குழுவிடம், வெள்ள பாதிப்பிற்கான ஆதாரங்களை மாவட்ட நிர்வாகம் வழங்க தவறியது மன்னிக்க முடியாத குற்றம் என, அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
மத்திய நிவாரண ஆய்வுக்குழு நம் மாநிலத்தை பார்வையிட வந்த போது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டதால் பாதிப்புகளை அவர்களால் காணமுடியவில்லை. பாதிப்புகளுக்கான ஆதாரங்களை மாவட்ட நிர்வாகம் வழங்க தவறியது மன்னிக்க முடியாத குற்றம்.
தற்போது சபாநாயகர், அதிகாரிகள் மெத்தன போக்கினால் புதுச்சேரி மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை கிடைக்காமல் செய்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டை பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை தலைமைச் செயலாளர் உடனடியாக எடுக்க வேண்டும்.
அரசால் அறிவிக்கப்பட்ட புயல் நிவாரண நிதி உதவி ரூ.5 ஆயிரம் அனைத்து குடும்பத்தினருக்கும் அவரவர் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏழை மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன், வட்டி, அபராதம், குறைந்தபட்ச இருப்பு தொகை ஆகியவற்றை வங்கிகள் பிடித்தம் செய்கின்றன.
இந்த நிவாரணத் தொகையில் எந்த பணத்தையும் பிடித்தம் செய்யக்கூடாது, என அரசு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.