விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
UPDATED : அக் 15, 2026 12:05 AM
ADDED : அக் 15, 2026 12:02 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க,. வலியுருத்தி உள்ளது.
இது குறித்து அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், ஏழை, எளிய மக்கள் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1100க்கு விற்ற ஒரு மூட்டை அரிசியின் விலை இன்று ரூ. 700 உயர்ந்து ரூ.1800க்கு விற்கப்படுகிறது.
ரூ. 900க்கு விற்ற ஒரு மூட்டை இட்லி அரிசி 300 உயர்ந்து 1,200-க்கும், ரூ.120க்கு விற்ற ஒரு கிலோ துவரம் பருப்பு 160-க்கும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.130ல் இருந்து ரூ.180க்கும், ரூ.120க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உளுத்தம் பருப்பு 150க்கும், 180-க்கு விற்ற ஒரு கிலோ பூண்டு 340க்கும் விற்கப்படுகிறது.
அதேபோல், காய்கறி விலையும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, இஞ்சி, எலுமிச்சை பழங்கள் உள்ளிட்டவை 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளன.
இதனால் புதுச்சேரியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலைவாசியைக் கட்டுப்படுத்த துறை ரீதியான உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து மொத்த வியாபாரிகளையும் அழைத்து விலையேற்றத்தை கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
