/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மே 26, 2025 12:16 AM

புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் ராஜராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, நகர செயலாளர் அன்பழகன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், முன்னாள் மாநில ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரி 3 தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசுக்கு சேர வேண்டிய, 50 சதவீத 325 மருத்துவ இடங்களை பெற கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட வேண்டும்.
தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பயிலும் மீனவ சமுதாய பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை இந்தாண்டே அமல்படுத்த வேண்டும்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடலுார் சாலை ஏ.எப்.டி மைதானம் அருகேயும், ராஜிவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரையிலான மேம்பால பணிகளையும் விரைந்து துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.