/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.80 லட்சம் லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை: அ.தி.மு.க., வலியுறுத்தல்
/
ரூ.80 லட்சம் லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை: அ.தி.மு.க., வலியுறுத்தல்
ரூ.80 லட்சம் லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை: அ.தி.மு.க., வலியுறுத்தல்
ரூ.80 லட்சம் லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை: அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : அக் 16, 2025 11:32 PM
புதுச்சேரி: போலி சைக்கிள் நிறுவனத்திடம் ரூ.80 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
வெளி மாநிலங்களை சேர்ந்த, குற்றப் பின்னணி உ ள்ளவர்கள், புதுச்சேரியை தங்கள் களமாக வைத்துக் கொண்டு சட்ட விரோத மற்றும் பொருளாதார குற்றங்களை துணிச்சலாக செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு, ஒருசில உள்ளூர் பிரபலங்களும், அதிகாரத்தில் உள்ளவர் களும் ஆதரவாக உள்ளதால், குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
போலி சைக்கிள் நிறுவனத்திடம் ரூ.80 லட்சம் லஞ்சம் பெற்றதாக சைபர் கிரைம் விசாரணை இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இது, போலீஸ் துறைக்கு மிகப்பெரிய களங்கத்தையும், தலைக்குனிவையும் ஏற்படுத்தி உள்ளது.
கேரளவை சேர்ந்த ஒருவர், புதுச்சேரியை பொருளாதார குற்றம் செய்யும் களமாக கொண்டு சைக்கிள் நிறுவனம் பெயரில் 700 பேரிடம் ரூ.75 கோடி மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்ய வேண்டிய உருளையன்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்வதை தவிர்த்துள்ளனர் .
உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார், மேற்படி மோசடி நிறுவன அலுவலகத்தை சோதனை செய்து, ரூ.2.5 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, நிறுவனத்தின் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த நிஷாத் அகமது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பதிவு செய்த நாளில் இருந்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு புதுச்சேரியில் ஒரு கூட்டமே சிண்டிகேட் அமைத்து செயல்பட்டது.
கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றியதால், அமலாக்கத்துறை விசாரணையில் பல உண்மைகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலி நிறுவனத்திடம் ஏமாந்த பொதுமக்களின் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸ் மற் றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலர், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக செயல்பட்டது வெட்கக் கேடானது.
இவ்வழக்கில் ரூ.80 லட்சம் லஞ்சம் பெற்றதாக இன்ஸ்பெக்டர் மீது, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த முறைகேட்டில், ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர் மட்டும் இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாக பெற்று இருக்க வாய்ப்பு இல்லை.
இதன் பின்னணியில் சில உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம். அல்லது தற்பொழுது குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் நிரபராதியாகவும் இருக்கலாம்.
இந்த குற்றப் பின்னணி தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. எனவே, உள்துறைஅமைச்சர் நமச்சிவாயம், விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மேலும், துறை ரீதியான உயர்மட்ட விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவிட வேண்டும். இதில் கவர்னர் நேரடியாக தலையிடவேண்டும்.
இந்த குற்றப் பின்னணியில் உள்ள போலீஸ், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.