/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் பரிசு ரூ.5,000 அ.தி.மு.க., வலியுறுத்தல்
/
பொங்கல் பரிசு ரூ.5,000 அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : டிச 13, 2025 05:09 AM
புதுச்சேரி: பொங்கல் பரிசாக ரேஷன் கார்டிற்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என அரசுக்கு, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், கூறியதாவது:
பொங்கல் பண்டிகைக்கு ரூ.750 மதிப்புள்ள பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு, அ.தி.மு.க., சார்பில் பாராட்டுக்கள்.
மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை மற்றும் புயல் அச்சுறுத்தலால் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் 15 நாட்களுக்கு மேலாக வருமானம் இன்றி பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மழை நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தும் அரசு நிவாரணம் வழங்கவில்லை.
மக்களின் நிலையை உணர்ந்து, பொங்கல் பரிசாக ரேஷன் கார்டிற்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் விளக்க வேண்டும் புதுச்சேரி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள போலி மருந்து விவகாரத்தில் அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவினர் முறையாக விசாரித்து பல இடங்களில் மருந்துகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இவை, போலி மருந்துகள் என்றால் அவை புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதையும், அப்படி விற்றிருந்தால் அந்த மருந்து விற்பனையை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி மருந்து விவகாரத்தில், சுகாதாரத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, தெளிவான விளக்கத்தை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும்' என்றார்.

