/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணவெளி தொகுதியில் சாலை அமைக்கும் பணி
/
மணவெளி தொகுதியில் சாலை அமைக்கும் பணி
ADDED : டிச 12, 2025 05:33 AM

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில், ரூ.55.36 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி, பூரணாங்குப்பம் வடக்கு தெருவில் ரூ.23.76 லட்சம் செலவில் சிமென்ட் சாலை, பெருமாள் கார்டனில் ரூ.5 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் ரூ.17.60 லட்சம் செலவிலும், நல்லவாடு கிராமத்தில் ரூ.9 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது.
இப்பணிகளை சபாநாயகர் செல்வம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி, உதவிப் பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் சரஸ்வதி, மணவெளி பா.ஜ., தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

