/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெஸ்ட் புதுச்சேரி அறக்கட்டளை அறிமுக விழா சாதனையாளர்களுக்கு விருது வழங்க முடிவு
/
பெஸ்ட் புதுச்சேரி அறக்கட்டளை அறிமுக விழா சாதனையாளர்களுக்கு விருது வழங்க முடிவு
பெஸ்ட் புதுச்சேரி அறக்கட்டளை அறிமுக விழா சாதனையாளர்களுக்கு விருது வழங்க முடிவு
பெஸ்ட் புதுச்சேரி அறக்கட்டளை அறிமுக விழா சாதனையாளர்களுக்கு விருது வழங்க முடிவு
ADDED : டிச 12, 2025 05:34 AM

புதுச்சேரி: வணிகம், கல்வி, ஆன்மிகம் மற்றும் சுற்றுலா துறைகளில் சிறந்த மாநிலமாக புதுச்சேரியை மேம்படுத்துவது மற்றும் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவது, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செயல்படுவது என்ற நோக்கத்துடன் 'பெஸ்ட் புதுச்சேரி' அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.
ஓட்டல் சற்குருவில் நடந்த அறிமுக விழாவில், தொலைத்தொடர்பு துறை நிபுணர் முத்துக்குமார், சுப்ரமணியன், சாம்ராஜ், சரவணன், காமராஜ், செல்வகணபதி, விண்ணரசன், முருகன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். இவ்வமைப்பிற்கு அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசகராக உள்ளார்.
அறக்கட்டளையின் முதல் பொதுவிழா, வரும் 20ம் தேதி, மாலை பழைய துறைமுக வளாகத்தில் உள்ள திறந்த வெளி மேடையில் நடக்கிறது. 5,000க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக 'ஜோகோ' நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு பங்கேற்று 'புதுச்சேரியின் தொழில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு' குறித்து பேசுகிறார்.
அதோடு, பல்வேறு துறைகளில் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் 50க்கு மேற்பட்ட சிறப்பு சாதனையாளர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர். உள்ளூர் கைவினை கலைஞர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவ குழுக்களின் புதுமை முயற்சிகளை வெளிப்படுத்தும் இன்னோவேஷன் ஸ்டால்களும் அமைக்கப்படுகின்றன.
பொது பங்கேற்பை வலுப்படுத்தும் நோக்கில் அறக்கட்டளை 'மை புதுச்சேரி ஸ்டோரி' எனும் போட்டியை அறிவித்துள்ளது. புதுச்சேரியின் பண்பாடு மற்றும் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் குறும்படங்கள், புகைப்படங்கள் அல்லது குறிப்புகளை பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம். இது மாற்றத்திற்கான இயக்கம் மட்டும் அல்ல; புதுச்சேரியின் உள்ளார்ந்த சிறப்புகளை கொண்டாடும் இயக்கம் என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

