/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரை மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு அ.தி.மு.க., கடிதம்
/
காரை மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு அ.தி.மு.க., கடிதம்
காரை மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு அ.தி.மு.க., கடிதம்
காரை மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு அ.தி.மு.க., கடிதம்
ADDED : அக் 05, 2025 03:07 AM
புதுச்சேரி : இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்களுக்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கடிதம் அனுப்பியுள்ளார்.
வங்க கடலில் கோடியக்கரை அருகே கடந்த 28ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டிற்கு இந்திய அரசு பலமுறை கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்கள் கைது மற்றும் படகுகள் பறிமுதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இவ்விஷயத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். மேலும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இந்திய அரசு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.