நாராயணசாமிக்கு அரசியல் ஓய்வு தேவை: அ.தி.மு.க., அன்பழகன் காட்டம்
நாராயணசாமிக்கு அரசியல் ஓய்வு தேவை: அ.தி.மு.க., அன்பழகன் காட்டம்
ADDED : நவ 15, 2026 04:52 PM
புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு அரசியல் ஓய்வு தேவை என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், கூறியதாவது:
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து நல்லாட்சி நடக்கிறது. இதனை பொருத்து கொள்ள முடியாத முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறி வருகிறார். அவருக்கு அரசியல் ஓய்வு தேவை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., ஒரு அங்கமாக உள்ளதால் என்னை தற்காலிக சபாநாயகராக முதல்வர் நியமித்து உள்ளார். தற்காலிக சபாநாயகருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தற்போது வரை சபாநாயகராக உள்ளேன்.
நிரந்தர சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரை இந்த பொறுப்புகளை நான் கவனிக்க வேண்டும் என அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏனாம் பகுதியில் பெய்த பெரும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுக்கு 10 ஆயிரம் நிவாரண உதவி தேவை என அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ.,வுமான பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கவர்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அனுமதி அளித்துள்ளார். இதில் அரசுக்கும், கவர்னருக்கும் மோதல் போக்கு என்பது தவறான கருத்தாகும்’ என்றார்.
பேட்டியின் போது மாநில இணை செயலாளர் திருநாவுக்கரசு, நகர செயலாளர் அன்பழகன், துணை செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
