/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பந்த்' அறிவித்தவர்களை கைது செய்ய வேண்டும் டி.ஜி.பி.,யிடம் அ.தி.மு.க., மனு

ADDED : ஜூலை 09, 2025 08:38 AM

புதுச்சேரி : பந்த் அறிவித்துள்ள இண்டியா கூட்டணி கட்சியினரை கைது செய்ய அ.தி.முக., வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க.,வின் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், டி.ஜி.பி., ஷாலினி சிங்கிடம் அளித்த மனு விபரம்:
புதுச்சேரியில் இன்று 9ம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகள் 'பந்த்' அறிவித்துள்ளது. இந்த 'பந்த்'தினால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர்.இதனை தவிர்க்க அனுமதியின்றி 'பந்த்'அறிவித்துள்ள போராட்டக்காரர்களை பி.என்.எஸ்.எஸ்., பிரிவு 170ன் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திட வேண்டும்.
இல்லையெனில் 'பந்த்' அன்று ஓடும் பஸ்கள் மற்றும் திறந்திருக்கம் வர்த்தக நிறுவனங்களை போராட்டக்காரர்கள் தாக்குவர். இதனால் சட்டம் ஒழுங்கு பதிக்கும்.
எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு போலீசார், போராட்டக்காரர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.