/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2025 04:45 AM

புதுச்சேரி : புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது.
மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், துணைத் தலைவர் ராஜாராமன், இணை செயலாளர் வீரம்மாள், திருநாவுக்கரசு, சுத்துக்கேணி பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, பேசியதாவது:
சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரி நகரப்பகுதி முழுதும் கலாசார சீரழிவில் சிக்கி தவிக்கிறது. கடந்த தி.மு.க., காங்., ஆட்சியில் கொண்டு வர முயற்சித்த 'கார்டிலா' வெளிமாநில சூதாட்ட சொகுசு கப்பல் மீண்டும் ஆளும் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், அனுமதி மறுத்த சொகுசு கப்பலுக்கு, தற்போது கவர்னர் அனுமதி அளித்துள்ளது வியப்பாக உள்ளது.
சுற்றுலா படகு விடுவதற்கு அனுமதி கேட்ட மீனவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக அனுமதி மறுக்கப்படுகிறது. சூதாட்ட சொகுசு கப்பலுக்கு ஒரே வாரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் இருந்து இறங்கிய 100க்கும் மேற்பட்ட பயணிகளுக்காக அம்பேத்கர் சாலையில் போக்குவரத்து மூடப்பட்டது.
சுற்றுலா கப்பல் வருகையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொடர்ந்து, சூதாட்ட பயண சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி அளித்தால், மீனவ மக்களுக்காக மாநில தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.