/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்ககோரி பானையுடன் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்ககோரி பானையுடன் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்ககோரி பானையுடன் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்ககோரி பானையுடன் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
UPDATED : ஜன 14, 2026 06:54 AM
ADDED : ஜன 14, 2026 06:50 AM

புதுச்சேரி: பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்க வலியுறுத்தி, அ.தி.மு.க.,வினர் பொங்கல் பானையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி, அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் கார்டிற்கும் ரூ.5,000 வழங்க வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
எந்த அரசாக இருந்தாலும் பண்டிகை கால நலத்திட்ட உதவிகளை காலத்தோடு வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் கார்டிற்கும் ரூ.5,000 வழங்க வேண்டும் என 10 நாட்களுக்கு முன் அ.தி.மு.க., சார்பில், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். அவரும், நல்ல அறிவிப்பு விரைவில் வரும் என்றார்.
அதன்படி பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்க முதல்வர் பலகட்ட முயற்சிகளை எடுத்தார். இது தொடர்பாக, கவர்னர், தலைமைச் செயலர், நிதிச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேசினார். ரேஷன் கார்டிற்கு ரூ.5,000 வழங்கினால் ரூ.180 கோடி மட்டுமே அரசுக்கு கூடுதல் செலவாகும்.
இதற்கு தேவையான நிதியை மத்திய அரசு உடன் விடுவிக்க வேண்டும். அல்லது மாநில நிதி தொகுப்பில் இருந்து மக்களுக்கு வழங்க அரசின் உயர் அதிகாரிகள் அரசுக்கு து ணை நிற்க வேண்டும் என்றார்.

