/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளத்தில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., ஆலோசனை
/
உப்பளத்தில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : ஜன 14, 2026 06:50 AM

புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, வாணரப்பேட்டை பிரான்சுவா தோப்பு மற்றும் ராசு உடையார் தோட்டத்தில் கட்டுமானம் நடைபெற்று நீண்ட காலமாக முடியாமல் உள்ள நவீன கழிப்பிட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். கோலாஸ் நகர் பூங்கா மற்றும் வம்பாகீரப்பாளையம் அங்கன்வாடி வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க தடையில்லா சான்று வழங்க வேண்டும்.
குபேர் திருமண மண்டபம் புனரமைப்பு பணியை விரைந்து முடித்து, மண்டபத்தை மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மின் மயான பணியை விரைந்து முடிக்க வேண்டும். மீன் அங்காடியை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்க வேண்டும்' என, வலியுறுத்தினார்.
தொகுதி தி.மு.க., செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் சந்துரு, ராகேஷ் உடனிருந்தனர்.

