/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ADDED : ஜன 14, 2026 06:51 AM

புதுச்சேரி: பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், மண்டலம் மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.
2025 - 26ம் ஆண்டிற்கான, மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, கதிர்காமம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
கண்காட்சியில் பங்கேற்ற, கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மாணவர் தானேஷின் படைப்பு தேர்வு செய்யப்பட்டு, மண்டல அளவில், மேல்நிலைப் பிரிவில் முதலிடத்தை பிடித்தார். இவர், மண்டல அளவிலான ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி மிட்டவுன் சுழற் கேடயம் பெற்றார்.
உயர்நிலை பிரிவில், ஒன்பதாம் வகுப்பு மாணவி லத்திகா மண்டலம் மற்றும் மாநில அளவில் தேர்ச்சி பெற்று, தென்னிந்திய அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடுநிலை பிரிவில், 6ம் வகுப்பு மாணவி ஷாலினி, மண்டல அளவில் பங்கேற்றார். பரிசு பெற்ற மாணவர்களை, பள்ளி துணை முதல்வர் மாலதி, பாராட்டினார். தலைமை ஆசிரியை அறிவழகி, பொறுப்பாசிரியர் தமிழ்செல்வி, ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் வாழ்த்தினர்.