ADDED : ஜன 14, 2026 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதி காங்., சார்பில் சமத்துவ பொங்கல் விழா காந்தி திருநல்லுாரில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, இந்திரா நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் ராஜாகுமார் தலைமை தாங்கினார். காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், வட்டார காங்., தலைவர் சோமசுந்தரம், நிர்வாகிகள் ராஜசேகர், குணசீலன், மகிளா காங்., பொறுப்பாளர் ரத்னா, மூத்த தலைவர் கோபால், தேவன், சுரேஷ்குமார், ராம்மூர்த்தி, சங்கர், சதீஷ், ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முத்திரையார் பாளையம், காந்தி திருநல்லுார் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

