/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் கட்டுமான பணியில் ஊழல் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
வாய்க்கால் கட்டுமான பணியில் ஊழல் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
வாய்க்கால் கட்டுமான பணியில் ஊழல் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
வாய்க்கால் கட்டுமான பணியில் ஊழல் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2024 04:12 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க., சார்பில், உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் கட்டுமான பணியில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட கோரியும், மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆட்டுபட்டி உப்பனாறு கழிவுநீர் கால்வாய் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., கோமளா, மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவி, முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் குணசேகரன், கருணாநிதி, கணேசன், நாகமணி, காந்தி, குமுதன்,நகர செயலாளர் அன்பழகன்,சுத்துக்கேணி பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.