/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4ம் தேதி துவங்கும் சொகுசு கப்பல் சேவையை தடுத்து நிறுத்த அ.தி.மு.க., கோரிக்கை
/
4ம் தேதி துவங்கும் சொகுசு கப்பல் சேவையை தடுத்து நிறுத்த அ.தி.மு.க., கோரிக்கை
4ம் தேதி துவங்கும் சொகுசு கப்பல் சேவையை தடுத்து நிறுத்த அ.தி.மு.க., கோரிக்கை
4ம் தேதி துவங்கும் சொகுசு கப்பல் சேவையை தடுத்து நிறுத்த அ.தி.மு.க., கோரிக்கை
ADDED : ஜூலை 02, 2025 01:59 AM
புதுச்சேரி : மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும், சொகுசு கப்பல் சேவையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க., வலியுறுத்தியுளளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
புதுச்சேரி, சுற்றுலா என்ற பெயரில் கலாசார சீரழிவை நோக்கி செல்கிறது. இந்நிலையில் வரும் 4ம் தேதி முதல் கார்டில்லா என்ற நிறுவனம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக புதுச்சேரிக்கு சொகுசு கப்பலை இயக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கப்பலில், சுமார் 1400 பேர் பயணிப்பர். அவர்கள், புதுச்சேரியில் இறங்கி ஒருநாள் தங்கி இளைப்பாருவர். இந்த கப்பல், கரையில் இருந்து 1.5. கி.மீ., துரத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து சிறு படகுகள் மூலம் பயணிகள் கரைக்கு அழைத்து வரப்படுவர். இதனால், மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.
சொகுசு கப்பல் வருகையால், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் சூழல் உருவாகும். இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும்.
எதிர்கட்சியாக இருந்தபோது எதிர்த்த சொகுசு கப்பல் சேவை திட்டத்தை, ஆளும் கட்சியானதும் கொண்டு வருவது என்பது, அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும். சமூக சமுதாய சீரழிவை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்திற்கு கவர்னர் எப்படி அனுமதி அளித்தார் என்பது தெரியவில்லை. கட்சி தலைமையின் அனுமதியுடன் போராட்டம் நடத்தப்படும். சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வருவதற்கான ஆணையை ரத்து செய்திட முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.