/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலைகளை சீரமைக்கவில்லை எனில் நகராட்சி அலுவலகம் முற்றுகை அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு செயலாளர் எச்சரிக்கை

ADDED : ஆக 07, 2025 02:19 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு பணிகளுக்காக தோண்டிய சாலைகளை உள்ளாட்சி துறை சீரமைக்கவில்லை எனில், நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்படும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் நகராட்சிக்கு சொந்தமான உட் புற சாலைகள் பல மாதங்களுக்கு முன், அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிகளுக்காக தோண்டினர். இப்பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் புதிய சாலைகள் அமைக்காததால் மக்கள் பாதித்துள்ளனர்.
சதுரடிக்கு ரூ.280 வீதம் வசூலித்து பணிகளை மேற்கொள்ளும் அரசு துறைகளே மீண்டும் சாலையை புனரமைக்க வேண்டும்.
இந்த தொகை மூலம் நகராட்சி சாலைகளை சரிசெய்ய வேண்டும். நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகத்சிங் வீதி, வ.உ.சி., தெரு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு திட்டங்கள், தனியார் நிறுவனங்களின் பணிக்காக தோண்டிய பள்ளங்கள் தற்போது வரை சரி செய்யாமல் உள்ளனர்.
சம்பந்தபட்ட துறைகளில், புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
உள்ளாட்சி துறை உடனே இதற்கான நடவடிக்கை எடுத்து, ஒரு வாரத்திற்குள் பள்ளங்களை மூடி, சாலைகளை சீரமைக்க வேண்டும். இல்லையேல் அ.தி.மு.க., உரிமை மீட்புக்குழு சார்பில், புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.