அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பிறந்த நாள் விழா
அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பிறந்த நாள் விழா
UPDATED : அக் 10, 2026 07:32 PM
ADDED : அக் 10, 2026 07:08 PM

புதுச்சேரி: புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன், தனது பிறந்த நாளை, குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இதையொட்டி, அவைத் தலைவர் அன்பானந்தம் தலைமையில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகை, சுப்பையா சாலையில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, கவுசிக பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, மாநில செயலாளர் அன்பழகன் தனது இல்லத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கினார்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், சட்டசபை செயலர் தயாளன், தொழிலதிபர்கள், அதிகாரிகள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க., மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர்கள், அன்பழகன், மாநில துணைச் செயலாளர்கள் குணசேகரன், கணேசன், கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, குமுதன், காந்தி, நாகமணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் செயலாளர் சிவாலயா இளங்கோ, இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விமலாஸ்ரீ, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுதர்சன், மீனவர் அணி செயலாளர் ஞானவேல், இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன், இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், நகர தலைவர்கள் செல்வகுமார், சிவா, தொகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், துரை, பிரதீப்குமார், சீனிவாசன், இளங்கோ, கணேஷ், கருணாநிதி, ராஜா, சம்பத், நடேசன், யூசுப், கிருஷ்ணன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
