தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ராமகிருஷ்ண மடம் :புதுச்சேரி கிளை திறப்பு

ராமகிருஷ்ண மடம் :புதுச்சேரி கிளை திறப்பு

ராமகிருஷ்ண மடம் :புதுச்சேரி கிளை திறப்பு


UPDATED : அக் 10, 2026 07:32 PM

ADDED : அக் 10, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:32 PM ADDED : அக் 10, 2026 07:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் புதுச்சேரி கிளை நேற்று திறக்கப்பட்டது.

சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் கிளை புதுச்சேரியில் நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழா, நேற்று முன்தினம் கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, வாஸ்து ேஹாமம், நவக்கிரக பூஜை நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு ராமகிருஷ்ண கவுதமானந்தஜி மகராஜ் கோவிலை திறந்து வைத்தார். 7:00 மணிக்கு தெய்வ திருமூவரைப் பிரதிஷ்டை செய்தல், 9:30 மணிக்கு ேஹாமம் நடந்தது. மதியம் 2:30 மணிக்கு கோயம்புத்துார், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் சுவாமி ஹரிவிரதானந்தர் ஹரி கதை வழங்கினார்.

மூத்த துறவி சுவாமி ஆத்மகனானந்தர், சுவாமி சுகதேவானந்தர், சுவாமி பரமசுகானந்தர் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். மாலை 4:00 மணிக்கு சேவை பணிகளுக்கான கடட்டம் திறப்பு விழா நடந்தது.

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்யஞானானந்தர் வரவேற்றார். புதுச்சேரி மடத்தின் பொறுப்பாளர் சுவாமி நித்யேஷானந்தர் பணிகள் குறித்து அறிக்கை அளித்தார்.

பேலுார் மடத்தின் பொதுச் செயலாளர் சுவாமி போதசாரானந்தர், புதுச்சேரி ராமகிருஷ்ணா சேவா சங்க துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முதல்வர் ரங்கசாமி சேவை பணிகளுக்கான கட்டடத்தை திறந்து வைத்தார். கவுதமானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். சென்னை மடத்தின் மேலாளர் சுவாமி ரகுநாயகானந்தர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us