தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பால் பதப்படுத்தும் நவீன ஆலை: பாண்லே நிறுவனம் தீவிரம்

பால் பதப்படுத்தும் நவீன ஆலை: பாண்லே நிறுவனம் தீவிரம்

பால் பதப்படுத்தும் நவீன ஆலை: பாண்லே நிறுவனம் தீவிரம்


UPDATED : அக் 10, 2026 07:56 PM

ADDED : அக் 10, 2026 07:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:56 PM ADDED : அக் 10, 2026 07:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்லே நிறுவனத்தில், நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் நவீன ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம், தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பாண்லே மேலாண் இயக்குனர் வடிவேல் முருகன், நிர்வாக அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த திட்டத்திற்கான நிதியை அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு கவர்னர், முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதையடுத்து, பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

இந்த திட்டத்தை கொண்டு வர முயற்சி எடுத்த மேலாண் இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரிக்கு பாண்லே ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர். பாண்லே நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டராக இருக்கும் ஐஸ்கிரீம் உற்பத்தி திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்துவதற்கான கட்டுமானப் பணிகளும் நடப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us