/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பிறந்த நாள் விழா தங்கத் தேர் இழுத்து வழிபாடு

ADDED : அக் 10, 2025 03:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் அக்கட்சியினர் நேற்று காலை தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.
நிகழ்ச்சிக்கு மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவிபாண்டுரங்கன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, துணை தலைவர் ராஜாராமன், நகர கழக செயலாளர் அன்பழகன், மாநில துணைச் செயலாளர்கள் கணேசன், நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் மாநில செயலாளர் இளங்கோவன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மகளிர் அணி செயலாளர் விமலாஸ்ரீ, இளைஞர் , இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்.
இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு, தலைவர் குணா, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் மோகன்தாஸ், ரபீக், மகளிர் அணி தலைவி தரணிதேவி, பொருளாளர் செந்திலரசி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் ரியாஸ் முகமது, செயலாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், துரை, டாக்டர் கணேஷ், ராஜா, சம்பத், கமல்தாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் கல்பனா, ரேணுகாதேவி, தொகுதி தலைவர்கள் காந்தி, சவுரிநாதன், மூர்த்தி, அருண், பிரவீன் உட்பட பலர் பங்கேற்றனர்.