/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் ஆலோசனை
/
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் ஆலோசனை
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் ஆலோசனை
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : பிப் 20, 2025 06:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
லெனின் வீதியில் நடந்த கூட்டத்திற்கு, மாநில அவைத்தலைவர் மாசிலா குப்புசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் மகேஸ்வரி, விஜயலட்சுமி, கோவிந்தம்மாள், சதாசிவம், சங்கர் உள்ளிட்ட மாநில, தொகுதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை மாநில முழுதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடடுவது. புதுச்சேரியின் மையப் பகுதியில் அரசு மூலம் ஜெ., உருவ சிலையை அமைத்திட வலியுறுத்த வேண்டும்.
பொறியியல் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற புதுச்சேரியில் ஐ.டி.,பூங்கா அமைத்திட வரும் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும். வருவாய்த்துறை மூலமாக மாணவர்களுக்கான சாதி உள்ளிட்ட சான்றிதழ்களை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில்களை புனரமைத்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிதாக ஜவுளி பூங்கா உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

