/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்நுட்ப பல்கலை.,யில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
/
தொழில்நுட்ப பல்கலை.,யில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
ADDED : பிப் 21, 2025 04:53 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடந்தது.
பேராசிரியை சுதா வரவேற்றார். பல்கலைக் கழக துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மருத்துவர் சவுந்தர்யா கலந்து கொண்டு எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து விளக்கினார்.
மேலும் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயின் காரணங்கள், பரவல் மற்றும் தடுப்பு முறைகள். சமூகத்தில் நிலவும் தவறான கருத்துகள் மற்றும் உண்மைகள், தொடக்க நிலையில் கண்டுபிடிக்கும் முக்கியத்துவம் மற்றும் இலவச சிகிச்சை வாய்ப்புகள், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் ஆதரவு திட்டங்கள் குறித்து பேசினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.