/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காந்தி நகர் அரசுப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
காந்தி நகர் அரசுப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காந்தி நகர் அரசுப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காந்தி நகர் அரசுப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 23, 2026 05:33 AM

புதுச்சேரி: காந்தி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி காந்தி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் குமார் தலைமை தாங்கினார். மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத்துவ அதிகாரி சரண்யா தலைமையிலான மருத்துவக்குழுவினர் பங்கேற்று எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது, அந்நோய் வராமல் தற்காத்துக் கொள்வது குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.