/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 01, 2025 02:32 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எய்ட்ஸ் குறித்து ஓட்ட பந்தய விழிப்புணர்வு நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாதுகாப்பான பாலின நடத்தை குறித்து விரிவான அறிவை ஏற்படுத்தும் நோக்கில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும், ரெட் ரன் விழிப்புணர்வு ஓட்டப் பந்தயம் நடந்தது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த விழிப்புணர்வு ஓட்ட பந்தய நிகழ்ச்சியை பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் அருள்விசாகன், போத்தீஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளிலிருந்து 600 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதேபோல் காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.