/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்ட் வளாகத்தில் குளிர்சாதன வசதி
/
கோர்ட் வளாகத்தில் குளிர்சாதன வசதி
ADDED : நவ 14, 2024 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் சங்க வளாகத்தில் குளிர்சாதன வசதி புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். விழாவில், அமைச்சர் லட்சுமிநாராயணன், பாண்டிச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன், சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட குளர்சாதன வசதி வளாகத்தை திறந்து வைத்தனர்.
வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் நாராயணகுமார் நன்றி கூறினார். பொருளாளர் ராஜபிரகாஷ், துணைத் தலைவி இந்துமதி, புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

