/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதுகாப்பு வளையத்திற்குள் விமான நிலையம்
/
பாதுகாப்பு வளையத்திற்குள் விமான நிலையம்
ADDED : மே 11, 2025 01:10 AM

இந்தியா - பாக்., போர் பதட்டத்தை தொடர்ந்து, புதுச்சேரி விமான நிலையத்தில் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டம் காரணமாக நாடு முழுதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதையொட்டி புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்திற்கு பெங்களூரு - ஹைதராபாத் செல்லும் பயணிகளை 3 மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலைய போர்டிங் வரும் 'வி.ஐ.பி.,'கள் உள்பட பயணிகள் மற்றும் அவர்களது 'லக்கேஜ்' கள் ஸ்கேனர் மற்றும் ஐ.ஆர்.பி.என். போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே விமானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பார்வையாளர்கள் அனுமதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வரும் வாகனங்கள் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருகிறது.
விமான நிலையத்தை சுற்றி உள்ள ஆறு கண்காணிப்பு கோபுரங்களில் அதி நவீன பைனாகுலர், (ரைபிள்) துப்பாக்கியுடன் விமான நிலைய பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஐ.ஆர்.பி.என்., போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாயில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.