ADDED : ஜூலை 06, 2026 02:42 AM

புதுச்சேரி: ஏ.ஐ.டி.யூ.சி., உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் யூனியன் மற்றும் பணி ஓய்வு பெற்றோர் சங்கத்தின் பேரவை கூட்டம், திலாஸ்பேட்டை சுப்பையா மன்றத்தில் நடந்தது.
காளியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் அந்தோணி துவக்கி வைத்தார்.
மாநில பொருளாளர் செல்வம், மாநில துணைத் தலைவர் மன்னாதன், முன்னாள் நிர்வாகிகள் கண்ணன், ஏழுமலை, ரவி வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில் சங்கத்தின் கவுரவ தலைவராக காளியப்பன், தலைவராக ஏழுமலை, செயலாளராக கண்ணன், பொருளாளராக ரவி, துணை தலைவர்களாக கண்ணப்பன், மச்சகாந்தன், துணை செயலாளர்களாக ராபர்ட், ஸ்ரீகாந்த் உட்பட 19 பேர் கொண்ட கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், உழவர்கரை நகராட்சியில் 7வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி வழங்கப்படாமல் உள்ள 33 மாத நிலுவை சம்பளத்தை ஒரே தவணையாக வழங்கிட வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு காலம் தாழ்த்தாமல் பணி கொடைகளை வழங்கிட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
