ADDED : அக் 24, 2026 06:52 AM

புதுச்சேரி: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி., மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஏ.ஐ.டி.யூ.சி., மாநில மாநாடு குயவர்பாளையத்தில் நேற்று நடந்து. மாநில கவுரவ தலைவர் அபிேஷகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினர்.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் மாநாட்டு கொடியேற்றினார்.
சுப்பராயன் எம்.பி., துவக்க உரையாற்றினார். அகில இந்திய செயலாளர் வகிதா நிஜாம் சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுச்செயலாளர் அந்தோணி மாநாட்டு அறிக்கை சமர்பித்தார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், கலை இலக்கிய பெருமன்றத்தலைவர் சிவக்குமார், ஏ.ஐ.கே.எஸ்., பொதுச் செயலாளர் ரவி, பி.கே.எம்.யு., பொது செயலாளர் பாலகிருஷ்ணன், இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் எழிலன், மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் ேஹமலதா, மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் முரளி வாழ்த்தி பேசினர்.
மாநில பொருளாளர் துரைசெல்ம் வரவு செலவு அறிக்கை வாசித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில தலைவராக தினேஷ்பொன்னையா, பொதுச் செயலாளராக அந்தோணி, துணைத்தலைவராக மோதிலால், செயலாளராக மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளார்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுவினியாகத்திட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக அண்ணா சிலையில் இருந்து சங்கத்தினர் பேரணியாக வந்தனர்.
